/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கபடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமைகபடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை
கபடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை
கபடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை
கபடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை
பெ.நா.பாளையம்: "அரசு மற்றும் தனியார் துறையில் உள்ள வேலைவாய்ப்பில் கபடி வீரர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென' மாநில கபடிகுழு செயலாளர் சபியுல்லா பேசினர்.
பெரியநாயக்கன்பாளையத்தில் தமிழ்நாடு மாநில கபடி குழுக் கூட்டம் மாநில செயலாளர் சபியுல்லா தலைமையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, துணை தலைவர் பாலச்சந்திரன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட கபடி கழக இணை செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார். கோவை மாவட்ட கபடி கழக செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மாநில செயலாளர் சபியுல்லா பேசியதாவது: சில ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு இருந்தது. விளையாட்டு வீரர்கள் கல்லூரியில் சேர அது பயன்பட்டது. விளையாட்டில் ஆர்வமுடைய பலரும் விளையாட்டின் மீது அதிக அக்கறை செலுத்தி பதக்கம், பட்டம் வாங்க முயன்றனர். அத்தகைய ஒதுக்கீடு தற்போது கல்லூரியிலோ, தனியார், அரசு துறையிலோ இல்லாததால் விளையாட்டின் மீது மாணவர்களுக்கு இருக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் அதிக தங்கப்பதக்கம் குவித்த பெருமை கபடி விளையாட்டுக்கு உள்ளது. கபடி வீரர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது போல கபடிக்கு அளிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாநில செயலாளர் சபியுல்லா பேசினார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில கபடி கழக துணை தலைவர் பாலச்சந்திரன், இணை செயலாளர் ஜெயராஜ், கோவை மாவட்ட செயலாளர் தண்டபாணி, முன்னாள் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். திருமூர்த்தி நன்றி கூறினார்.